- சிவகங்கை
- 48 காலனி முனிசிபல் மிடில்
- தலைமையாசிரியர்
- மரியா செல்வி
- மாவட்ட கல்வி அலுவலர்
- மாரிமுத்து
- இந்திராணி
- பள்ளி
- தின மலர்
சிவகங்கை, மார்ச் 12: சிவகங்கை 48 காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை மரிய செல்வி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார்.
முதல் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பேரணி நடைபெற்றது. பின்னர் 25 குழந்தைகளுக்கு முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, கிரீடம் அணிவித்து, துண்டு போர்த்தி மகிழ்ந்தார். மேலும் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வருவதாகவும் கூறினார்.
வட்டார கல்வி அலுவலர், பள்ளியில் சிறப்புகள் அடங்கிய, விளம்பர தாள்களை, பெற்றோர்களுக்கு வழங்கினார். பள்ளியில் குழந்தைகளை சேர்த்து, பள்ளிக்கு பெருமை சேர்த்த பெற்றோர்களுக்கு நன்றி கூறினர். இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சியில் முதல் இடத்தை பிடித்த மாணவன் பிரித்திவி ராஜை பாராட்டி பரிசு வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
The post நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.