×

திண்டுக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

 

திண்டுக்கல், மார்ச் 12: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு ஆட்சி சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மேலும் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் 2வது நாள் நிகழ்ச்சியாக குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, வரதட்சனை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு, அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராக சுதா இசை பள்ளி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி, திண்டுக்கல் கலாலாய நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் இரண்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமை பெண் திட்டம், மக்களுடன் முதல்வர், பசுமை தமிழகம் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

The post திண்டுக்கல்லில் தமிழக அரசின் சாதனை விளக்க விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Dindigul ,Dindigul Fort Mariamman Temple ,
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்