×

போதைப்பொருள் கடத்தல் குறித்து பேச அதிமுக, பாஜவுக்கு அருகதை இல்லை: துரை வைகோ அட்டாக்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்றி விடக்கூடாது என்பதற்காவே 7 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தலை போல் இந்த முறையும் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தனி சின்னத்தில் போட்டியிடுகிறோம். நான் விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். நான் போட்டியிடுவது குறித்து தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் வளர்ந்த வண்ணம் உள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பாட்டார். தரவுகளும், சாட்சிகளும் சரியில்லாததால் அவர் விடுதலை ஆகிவிட்டார். விசாரணை சரியாக நடந்திருந்தால் அப்போதே ஜாபர் சாதிக் வெளியில் வந்திருக்க மாட்டார். அப்போது ஜாபர் சாதிக்கிற்கு ஆதரவாக பாஜ வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் வாதிட்டார். எனவே இதுகுறித்து பேச அதிமுகவிற்கும், பாஜவிற்கும் தகுதி இல்லை. இவ்வாறு தெரிவித்தார்,

The post போதைப்பொருள் கடத்தல் குறித்து பேச அதிமுக, பாஜவுக்கு அருகதை இல்லை: துரை வைகோ அட்டாக் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Durai ,DMK ,General Secretary ,Durai Vaiko ,Viswanantham ,Sivakasi, Virudhunagar district ,DMK alliance ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...