×

பந்தலூர் அருகே விவசாயிகளுக்கு தேனி வளர்ப்பு குறித்து பயிற்சி

 

பந்தலூர், மார்ச் 12: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே மரப்பாலம் பகுதியில் சோலிடரிடட் அமைப்பு சார்பாக தேனி வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. மரப்பாலம் சோலிடரிடட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு சோலிடரிடட் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேனி வளர்ப்பு பயிற்றுநர் சிலம்பரசன், ஆரோக்கியசாமி ஆகியோர் தேனீக்கள் வளர்ப்பு, தேன் உற்பத்தி, தேன் கூடு பராமரிப்பு, தேன் எடுத்தல், தேன் விற்பனை செய்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தேனீ வளர்ப்பு கூடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

The post பந்தலூர் அருகே விவசாயிகளுக்கு தேனி வளர்ப்பு குறித்து பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Solidarity ,Marapalam ,Bandalur, ,Nilgiris district ,Manikandan ,Solidarity Organization ,Training ,Center.… ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்