×

எடப்பாடி தலைமையில் நடந்த அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் முடிந்தது

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற அதிமுக வேட்பாளர் நேர்காணல முடிந்தது. நேர்காணலில் பங்கேற்றவர்களிடம், சீட் வழங்கினால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் 2,450 பேர் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்திருந்தனர். நேற்று முன்தினம் 20 தொகுதிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மனு செய்தவர்களிடம் நேரடியாக நேர்காணல் நடத்தினர். இந்நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு 2வது நாள் நேர்காணல் தொடங்கியது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. அதன்படி நேற்று மாலையுடன் 40 தொகுதிக்கான நேர்காணல் நடந்து முடிந்தது. நேர்காணலுக்கு வந்தவர்களிடம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் தொகுதியில் கட்சி நிலவரம், அதிமுக சார்பில் என்னென்ன பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள், சீட் வழங்கினால் எவ்வளவு செலவு செய்வீர்கள், வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என பல்ேவறு கேள்விகளை கேட்டறிந்தனர். இதையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட் குறித்து முடிவு செய்யப்படும். பின்னர், அதிமுக சார்பில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

The post எடப்பாடி தலைமையில் நடந்த அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi ,CHENNAI ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்