×

பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அடங்கிய நெமிலி, நாகப்பட்டு, பரந்தூர் உள்ள கிராம பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி, நாகப்பட்டு மற்றும் பரந்தூர் பகுதிகளில் 50 பேர் மிகவும் பிற்படுத்த வகுப்பை சேர்ந்த கிராம மக்கள், சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு சாலை வசதி, மின்சாரம் வசதி, குடிநீர் வசதிகள் இல்லை. ஆனால் அண்மையில் 17 பேருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் கிராம கணக்கிலும், வருவாய் துறை கணக்கிலும் வைக்காமல் அலைகின்றனர். இதனால் எங்களால் வீடு கட்ட முடியவில்லை.  எனவே, எங்களுக்கு பட்டா வழங்கி வழங்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளாக குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரவேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

The post பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Collector ,Patta ,Nemili ,Nagapattu ,Parantur ,Sriperumbudur ,Kalachelvi ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...