×

வி.களத்தூர் ராயப்பன் நகர் பகுதியில் காய்ச்சல் இருப்பதாக தகவல் கழிவு நீர் வாய்க்கால் தூர் வார உத்தரவு

* வீதி, வீதியாக பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் : வி.களத்தூர் ராயப்பன் நகர் பகுதியில் காய்ச்சல் இருப்பதாக வந்த தகவலையடுத்து, கழிவு நீர் வாய்க்கால் தூர் வார உத்தரவிட்டார். மேலும் வீதி, வீதியாக சென்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார்.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூரில் உள்ள ராயப்பன் நகர் பகுதியில் ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக வரப்பெற்ற தகவலை அடுத்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று (10ம்தேதி) ராயப்பன் நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்பட்டுள்ளதா, மக்களுக்கு தூய்மையான குடிநீர் முறையாக வழங்கப்படுகின்றதா, கிராம மக்களுக்கு கழிப்பிட வசதிகள் உள்ளதா என வீதிவீதியாக சென்று அனைத்து தெருக்களிலும் ஆய்வு செய்து, பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கிராமப்பகுதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும், எங்கேயும் தண்ணீர் தேங் காத வகையில் அனைத்து கழிவுநீர் வாய்க்கால்களில் இருந்தும் கழிவுநீர் முறையாக வெளியேற்றப்பட்டு அப்புறப்படுத்த வேண்டும் என வட்டார வளர்ச்சி அலு வலர் மற்றும் ஊராட்சி மன் றத்தலைவர், துணைத் தலைவருக்கு உத்தரவிட் டார்.

கழிவுநீர் வாய்க்கால் செல்லும் இடத்தில் தனி நபருக்கு சொந்தமான இடத்திற்கு சென்று வர ஏதுவாக மணல் போட்டு அடைக்கப்பட்டிருப்பதால் கழிவுநீர் அந்த இடத்தில் தேங்கி நிற்பதை பார்வை யிட்ட மாவட்டகலெக்டர், அடைப்பு அகற்றப்பட்டு கழிவுநீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும், ஒவ்வொரு வீதியிலும் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள், வீட்டின் முன் டிரம்புகள் உள்ளிட்ட பாத்திரங்களில் வைக்கப்பட்டு ள்ள தண்ணீரை பாதுகாப் பாக மூடிவைத்து பயன் படுத்த வேண்டும் என்றும், கழிவு நீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் உத்த ரவின்படி, அப்பகுதியில் ஊராட்சிஒன்றிய தொடக் கப் பள்ளியில் சிறப்பு மரு த்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர், லாரிகளில் வழங் கப்படும் குடிநீர் சுகாதாரத் துறை தெழில்நுட்ப வல்லு நர்களால் முறையாக பரிசோதனை செய்து குடிப்பத ற்கு உகந்ததாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அப்பகுதியில் ஒரு சில இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கப் பட்டிருப்பதால், கழிப்பறைகள் வேண்டும் என்று அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், மகளிருக்கென்று தனியாக சுகாதார வளாகமும், மற் றும் ஒரு பகுதியில் பொது சுகாதார வளாகமும் கட்டிக் கொடுக்க வேண்டும் என் றும், தனிநபர் கழிப்பறை தேவைப்படும் நபர்களின் பட்டியல் தயார்செய்து அவ ர்களுக்கு அரசு திட்டத்தின் மூலம் தனிநபர் கழிப்பறை கட்டிக்கொடுக்க விரைந்து மாவட்ட கலெக்டர் உத்தர விட்டார்.

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ஏதுவாக கல்லாற்றில் இருந்து புதி தாக ஆழ்துளைக் கிணறு அமைக்க தேர்ந்தெடுக்கப்ப ட்டுள்ள இடத்தை மாவட்டக் கலெக்டர் நேரில் பார்வை யிட்டு ஆய்வுசெய்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் கோகுல், பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணைஇயக்குநர் டாக்டர் அஜிதா, வேப்பந்தட்டை தாசில்தார் மாயகிருஷ் ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வி.களத்தூர் ராயப்பன் நகர் பகுதியில் காய்ச்சல் இருப்பதாக தகவல் கழிவு நீர் வாய்க்கால் தூர் வார உத்தரவு appeared first on Dinakaran.

Tags : V.Kalathur ,Rayappan Nagar ,Perambalur ,V. Kalathur ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...