×

அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இந்தியாவை இந்து நாடாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது: ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் நீண்டநாள் நோக்கம் என்றும் அது நிறைவேறினால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முடிவுகட்டப்படும் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். 400கும் மேற்பட்ட இடங்களை பெற்றால் தான் அரசியல் சட்ட அமைப்பில் திருத்தும் கொண்டுவரமுடியும் என்றும் அதுவே தங்களது இலக்கு எனவும் கர்நாடக பாஜக எம்.பி அனந்த்குமார் எக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசியல் சட்ட அமைப்பில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்ற பாஜகவின் நோக்கம் ரகசியமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பல தனிப்பட்ட கலந்துரையாடல்களில் இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்றும் இந்தியே நாட்டின் முக்கியமான மொழியாக இருக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பலமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம் என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அனந்த்குமார் எக்டே போன்றவர்கள் இது போன்றகருத்துக்களை கூறிவிட்டு பின்னர் அதனை மறுத்துவிடுவார் என குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம் இது அவர்களின் பழைய சூழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சட்ட அமைப்பை மற்றும் எண்ணத்தை பாஜக இன்னும் தொடர்வதை வெளிப்படுத்தி ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் உற்சாகபடுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் அதில் தற்போது அவர்கள் வெற்றி அடைந்து விட்டனர் எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். பாஜக நினைப்பது போல அரசியல் சட்ட அமைப்பு திருத்தப்பட்டால் அதுவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முடிவாக இருக்கும் என்றும் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். மேலும் கூட்டாட்சி, சிறுபான்மையினருக்கான உரிமை 2 அதிகார பூர்வ மொழிகளில் ஆங்கிலத்திற்கான இடம் ஆகியவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இந்தியாவை இந்து நாடாக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது: ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,India ,P. Chidambaram ,CHENNAI ,Former Finance Minister ,Dinakaran ,
× RELATED “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு...