×

சித்தூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அதிரடி படை வருகை

*மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அணிவகுப்பு

சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அதிரடி படையினர் நேற்று வந்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சியினரும் தயாராகி பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தல் பணி பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடி படையினர் நேற்று சித்தூர் வந்தனர். அவர்கள் நேற்று சித்தூர் நகரத்தில் எஸ்பி ஜோஷ்வா தலைமையில் அணி வகுப்பில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, எஸ்பி ஜோஸ்வா பேசியதாவது: சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு பிரச்னை இல்லாதவாறு சிறப்பு அதிரடி படையினர் சித்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.

அவர்கள் மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்களில் அணிவகுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சித்தூர், நகிரி, பலமனேர் உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கு சிறப்பு அதிரடி படையினரை பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. தேர்தலை எந்த பிரச்னை இல்லாமல் அமைதியாக நடத்துவது குறித்து மக்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதும், அநாகரீக சக்திகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதுமே இந்த அணிவகுப்பின் முக்கிய நோக்கமாகும்.

தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் தவறான எண்ணங்களுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் பொறுப்பு. அனைத்து மக்களும் அச்சமின்றி வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். இந்த அணிவகுப்பு இன்று (நேற்று) முதல் மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்கள் மற்றும் பிரச்னைக்குரிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.இதில் பலமனேர் டி.எஸ்.பி மகேஸ்வர், நகரி டி.எஸ்.பி மூர்த்தி, ஏ.ஆர்.டி.எஸ்.பி இலியாஸ் பாஷா, பல எஸ்.ஐ.க்கள், ஆர்.எஸ்.ஐ.க்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அதிரடி படை வருகை appeared first on Dinakaran.

Tags : Action Force ,Chittoor district ,Chittoor ,AP ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...