×

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை உடைத்து 30 சவரன் நகை பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜாரில் வீட்டை உடைத்து 30 சவரன் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ளது ராஜலட்சுமி (58) தனி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் அவர்களுடைய மகள் மருமகள் உள்ளிட்ட உறவினர்களுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு கடந்த 6 தேதி அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளார் .

இந்த நிலையில் மேற்கண்ட வீடு 3 நாட்களாக வீடு பூட்டியே கிடந்தது. ராஜலட்சுமி உடைய உறவினர் சத்தியநாராயணன் என்பவர் நேற்று மாலை ஆறு மணி அளவில் அவ்வழியாக சென்றுள்ளார். அப்போது எதார்த்தமாக வீடு பூட்டி கிடைக்கிறதா என்பதை பார்த்தபோது வீடு திறந்து நிலையில் இருந்துள்ளது.

சந்தேகம் அடைந்த சத்தியநாராயணன் ராஜலட்சுமிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ள அப்போது அவர்கள் சீரடி கோவில் சன்னிதானத்தில் இருந்து வருவதாகவும் தகவலை கூறிய பின்னர் சத்திய நாராயணன் உடனடியாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தவளை கூறினார்.

விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் ராஜலட்சுமி தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களில் சுமார் 30 சவரன் நகை, பத்தாயிரம் ரூபாய் பணம், ஒரு லேப்டாப், ஒரு செல்போன் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மணி நேரம் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் மோப்பநாய் வீட்டின் பின்பக்கம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்பு கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அருகே உள்ள தனியார் மருத்துவமனை சிசிடிவி கேமரா மற்றும் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து இரண்டு நாட்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் மூன்று மர்ம நபர்கள் அவ்வழியாக இரண்டு முறை சென்று வருவதாகவும் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியோசக்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு காவல் நிலையங்களில் போதிய காவலர்கள் இல்லாமல் பல இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செல்போன் பறிப்பு, சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை சரி செய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மேற்கண்ட காவல் நிலையங்களுக்கு எவ்வளவு காவலர்கள் பற்றாக்குறை உள்ளது என கணக்கீடு செய்து தமிழக காவல்துறை பரிந்துரை செய்ய வேண்டுமென பகுதியைச் சேர்ந சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே வீட்டை உடைத்து 30 சவரன் நகை பணம் கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Rajalakshmi ,Kummidipoondi Municipal Electricity Board ,Chennai government ,
× RELATED வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு...