×

லோக் அதாலத்தில் 1,549 வழக்குகளுக்கு தீர்வு

 

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ஆயிரத்து 549 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 9மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் ஆயிரத்து 397 குற்ற வழக்குகள், 180 செக்மோசடி வழக்குகள், 213 வங்கிக்கடன் வழக்கு, 161 வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 119 குடும்ப பிரச்னை வழக்கு, 518 சிவில் வழக்கு என மொத்தம் 2ஆயிரத்து 721வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன. இதில் ஆயிரத்து 473 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 80 லட்சத்து 7ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது.

வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 475வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.79லட்சத்து 19ஆயிரத்து 580 வரவானது. இவ்வாறு நேற்றைய லோக் அதாலத்தில் மொத்தம் ஆயிரத்து 549வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.4கோடியே 59லட்சத்து 26ஆயிரத்து 600க்கு தீர்வு காணப்பட்டது.

சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி குரூமூர்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, நீதிபதிகள் சுந்தர்ராஜ், செந்தில்முருளி, அனிதாகிரிஸ்டி,வழக்கறிஞர்கள் ஜானகிராமன், சித்திரைச்சாமி, சவுந்திரபாண்டியன் வழக்குகளை விசாரித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் லோக் அதாலத் ஏற்பாடுகளை செய்தனர்.

The post லோக் அதாலத்தில் 1,549 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Athalam ,Sivagangai ,Sivagangai district ,National Law Commission ,State Law Commission ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்