×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச கண் மருத்துவம் ரத்ததான முகாம்

 

பொன்னேரி, மார்ச் 11: மீஞ்சூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் மீஞ்சூர் வள்ளுவன் வாசுகி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

மீஞ்சூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் ஏராளமான திமுகவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ரத்தங்களை வழங்கினர். இந்த இலவச கண் மருத்துவ முகாமில் கண் சம்பந்தப்பட்ட பரிசோதனை, கிட்ட பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பரிசோதனைகளும் கண் கண்ணாடியும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மீஞ்சூர் பேரூர் செயலாளர் கா.சு.தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் வில்சன் நிலவழகன், துணை அமைப்பாளர்கள் ரியாஸ் அகமது, அன்புச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏ.கே.சுரேஷ், செந்தமிழ் கே.சசிகுமார், தினகரன், ராஜேந்திரன், கணேஷ், கருணாகரன், திருப்பதி, ஏ.சி.ராஜேந்திரன்,

முப்புராஜ், இளையராஜா, மில்லர், தமிழரசு, விமல், ராஜ் குமார், ரமேஷ், அனாஸ், கபீர், ஹிந்துஸ்தான் சீனிவாசன், உதயகுமார், சேகர், ராஜேஷ், சுகன்யா வெங்கடேசன், ஜோதி, எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாவட்ட ரத்த பரிமாற்று அலுவலர் பிரதிபா மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய ரத்தப் பரிசோதகர் ஷீலா, மருத்துவ குழுவினர் ரத்தம் பெற்று ரத்தம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவச கண் மருத்துவம் ரத்ததான முகாம் appeared first on Dinakaran.

Tags : eye clinic ,Chief Minister ,M. K. Stalin ,Ponneri ,Meenjoor ,Tamil Nadu ,M.K.Stalin. ,Tiruvallur East District ,Meenjoor Perur DMK ,Government Medical College Hospital ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி...