×

பெண்களுக்கு பாலின சமத்துவம் அவசியம் தஞ்சாவூரில் பெண்கள் ஓபன் கராத்தே போட்டி

 

தஞ்சாவூர், மார்ச்11: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் சார்பில் மகளிர்க்கான முதல் ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது, இப்போட்டியை மாநகராட்சி மேயர் இராமநாதன், கராத்தே கழக செயலாளர் முனுசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் பள்ளி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்டா, குமித்தே ஆகிய 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை காட்டினர், இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post பெண்களுக்கு பாலின சமத்துவம் அவசியம் தஞ்சாவூரில் பெண்கள் ஓபன் கராத்தே போட்டி appeared first on Dinakaran.

Tags : Women's Open Karate Tournament ,Thanjavur ,International Women's Day ,Rio Karate Club ,Aadhavan Lions ,Thanjavur Anna ,Satya ,Sports ,Indoor Stadium ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...