×

நீட் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கை: 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு, மார்ச் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பப் பதிவு வரும் 16ம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

The post நீட் தேர்வு: கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,National Examination Agency ,Dinakaran ,
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்