×

கர்நாடகாவில் அதிமுக போட்டி?

சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இருந்தவரை கர்நாடகாவில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக களம் கண்டு வந்தது. அவர் மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் அதிமுக போட்டியிடவில்லை. அதே நேரத்தில் பெங்களூரு, கோலார் தங்கவயல், சிவமொக்கா, பத்ராவதி, மைசூரு, மண்டியா, கோலார் போன்ற பகுதிகளில் அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதைப் பயன்படுத்தி தற்போது கர்நாடக அதிமுகவினர், மக்களவை தேர்தலில் போட்டியிட சென்னையில் உள்ள அதிமுக தலைமைக்கு வலியுறுத்தி வந்தனர்.

அதை நிரூபிக்கும் வகையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் விருப்ப மனு அளித்தார். பெங்களூருவில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் மத்திய தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்களுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலை தொடர்ந்து கர்நாடகாவில் அதிமுக போட்டியிடுமா என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

The post கர்நாடகாவில் அதிமுக போட்டி? appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chennai ,General Secretary ,First Minister ,Jayalalitha ,Bengaluru ,Kolar Tangwail ,Sivamoka ,Bhadrawati ,Mysuru ,Mandya ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்