×

மனைவி பிரிந்து சென்ற விவகாரம்; வீடுபுகுந்து சரமாரியாக தாக்கப்பட்ட கணவர், மருத்துவமனையில் சீரியஸ்

பெரம்பூர்: மனைவியை பிரிந்து தனியாக வசித்துவரும் கணவரை சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார். சென்னை அகரம் பகுதியை சேர்ந்தவர் சையது இம்ரான் (33). இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவரது மனைவி ஷகிலா (30). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்கின்றனர்.

நேற்று ஷகிலாவின் உடைகள் அனைத்தையும் அவரது வீட்டுக்கு சையது இம்ரான் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஷகிலாவின் உறவினர்கள் நேற்று இரவு 11 மணி அளவில், சையத் இம்ரான் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இம்ரானை வெளியே வரவழைத்து அவரை கல், கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த சையது இம்ரானை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அங்கு அவருக்கு தலையில் 25 தையல்களும் முகத்தில் 30 தையல்கள் போடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து புகாரின்படி, செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குபதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றார்.

The post மனைவி பிரிந்து சென்ற விவகாரம்; வீடுபுகுந்து சரமாரியாக தாக்கப்பட்ட கணவர், மருத்துவமனையில் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Syed Imran ,Akaram ,Chennai ,Shakila ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்