×

சின்னமனூர் பகுதியில் முதற்கட்ட நெல் அறுவடை நிறைவு: இயந்திரங்கள் திரும்பி சென்றன

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் 4000 ஏக்கர் அளவில் முல்லைப் பெரியாற்று பாசனத்தில் இரு போகம் நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் இறுதியில் இரண்டாம் போகத்திற்கான நடவுப்பணிகள் முடிந்தது. 120 நாட்களில் நெல் மணிகள் கதிராக மாறி அறுவடைக்கு தயாராக இருந்தது. முதற்கட்டமாக மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் கடந்த இரண்டு வாரமாக அறுவடை துவங்கி வேகமாக நடைபெற்று முடிந்தது. பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடைப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவடை இயந்திரங்கள் திருப்பி அனுப்பப் பட்டது.

லாரிகள், டிராக்டர்களையும் ஈடுபடுத்தி பணிகளை விவாசாயிகள் விரைந்து முடித்துள்ளனர். அறுவடை முடிந்த நிலையில் வைகோல்களை ஒட்டுமொத்தமாக வியாபாரிகள் விலை பேசி கொள்முதல் செய்தனர். அவற்றை நவீனமாக இயந்திரத்தைப் பயன்படுத்தி சுற்றி எடுத்து லாரிகளில் ஏற்றிச் சென்றனர். மேலும் தீவனத்திற்கும் எடுத்துச் சென்றனர்.இந்த இரண்டாம் போகத்தில் ஏக்கருக்கு சன்ன அரிசியான நெல் மூடைகள் 30 லிருந்து 35 வரை கிடைத்தது.மேலும் எஞ்சியுள்ள பகுதிகளான சின்னமனூர், பெருமாள் கோயில் பரவு, வேம்படிகளம் பரவு, கருங்கட்டான்குளம் பரவு, முத்துலாபுரம் பிரிவு என பல்வேறு பகுதிகளில் விரைவில் அறுவடை துவங்கி ஏப்ரல் முதல் வாரத்திற்குள் முடிந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post சின்னமனூர் பகுதியில் முதற்கட்ட நெல் அறுவடை நிறைவு: இயந்திரங்கள் திரும்பி சென்றன appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Mullai Periyartu ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்