×

உலக சிறுநீரக தினத்தையொட்டி டாக்டர் மேத்தா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம்

சென்னை: உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நடைப்பயணத்தை டாக்டர் மேத்தா மருத்துவமனை நடத்தியது. உலக சிறுநீரக தினத்தின் 19வது பதிப்பைக் கொண்டாடும் வகையில், டாக்டர் மேத்தா மருத்துவமனை, குழந்தை சிறுநீரகவியல் துறை ஒரு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வானது, “அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் – பராமரிப்பு மற்றும் உகந்த மருந்துப் பயிற்சிக்கான சமமான அணுகலை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.

தென்னிந்திய நடிகரும் தயாரிப்பாளருமான மேத்யூ வர்கீஸ், ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு மற்றும் கலைஞர் அரவிந்த் சுந்தர் ஆகியோர் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைப்பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நடைபயணம் இம்மருத்துவமனையின் குழந்தைகள் சிறுநீரகத்துறை பிரிவு சார்பில், அதன் இயக்குனர் டாக்டர் பி.ஆர். நம்மாழ்வார் வழிகாட்டுதலின்படி, டாக்டர் கலைவாணி கணேசன் ஆகியோர் தலைமையின் கீழ் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டனர். நடைபயணத்தில் அவர்கள் தங்களது கைகளில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சிறுநீரக நோய்களைத் தடுப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்த ஆண்டு சர்வதேச சிறுநீரக தினம் ‘அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம் – பராமரிப்பு மற்றும் உகந்த மருந்துப் பயிற்சிக்கான சமமான அணுகலை மேம்படுத்துதல் என்ற கருப்பொருளை அடைப்படையாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர். மேத்தா மருத்துவமனையின் குழந்தை சிறுநீரகவியல் துறையின் இந்த வருடாந்திர முயற்சி, நமது சமூகம் ஒன்று கூடி, சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிச் செயல்படுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

The post உலக சிறுநீரக தினத்தையொட்டி டாக்டர் மேத்தா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் appeared first on Dinakaran.

Tags : Dr. Mehta Hospital ,World Kidney Day ,Chennai ,Dr. Metha Hospital ,Department of Pediatric Urology ,World Kidney Day Awareness Walk ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...