×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை 3 படகுகளுடன் இலங்கை படை சிறைபிடித்தது.

தமிழ்நாடு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 22 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Nadu ,Sri Lankan Navy ,Kachativu ,Neduntivu ,FORCE ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்