×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.173 கோடி செலவில் 1,520 குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.172 கோடியே 72 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 1,520 குடியிருப்புகளையும், வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.108 கோடியே 62 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் பெரியார் நகர் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.62 கோடியே 88 லட்சம் செலவில் 480 புதிய குடியிருப்புகள், மதுரை மாவட்டம், மஞ்சள்மேடு திட்டப்பகுதியில் ரூ.37 கோடியே 25 லட்சம் செலவில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி திட்டப்பகுதியில் ரூ.27 கோடியே 6 லட்சம் செலவில் 264 அடுக்குமாடி குடியிருப்புகள், அறந்தாங்கி திட்டப்பகுதியில் ரூ.13 கோடியே 8 லட்சம் செலவில் 120 புதிய குடியிருப்புகள்,

தேனி மாவட்டம், மீனாட்சிபுரம் திட்டப்பகுதியில் ரூ.24 கோடியே 41 லட்சம் செலவில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜசமுத்திரம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் ரூ.8 கோடியே 4 லட்சம் செலவில் 96 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.172 கோடியே 72 லட்சம் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,520 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், ஜாபர்கான்பேட்டையில் ரூ.48 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், தல்லாகுளத்தில் ரூ.59 கோடியே 92 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ.108 கோடியே 62 லட்சம் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.173 கோடி செலவில் 1,520 குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Urban Habitat Development Board ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Housing Board.… ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...