×

சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணி நடப்பதால் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ கட்டுமானப் பணிக்காக மார்ச் 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் என நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம். சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பிவிடப்படும். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம். அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna Bhaphalam ,Nungambakkam ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் யூடியூபர்...