×

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 9 வட்டங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், மார்ச் 9: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 9 வட்டங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் களைவதற்கும் மக்களின் குறைகளைக்கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறதும்.

அதன்படி 2024 மார்ச் மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 9 வட்டங்களில் ரேஷன் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,District Ration Grievance Meeting ,Thanjavur District ,Collector ,Deepak Jacob ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...