×

சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

 

பெரம்பலூர், மார்ச் 9: சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக சில சமூக விரோதிகள் குழந்தை களை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேக மாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.

இது போன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற பிரதான எண்ணத்துடனும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் த றான செய்திகளை பரப்பி வருகின்றனர். போலியான செய்திகளை கேட்டும், காணொலிகளை பார்த்தும் பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றம் அடையவோ தேவையில்லை.

இது சம்பந்தமாக பொது மக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 94981- 00690 அல்லது 100-க்கு அழைக்கலாம். மேலும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சமூக வலை தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,SP ,Shyamla Devi ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி