×

ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகளா? சென்னை காவல்துறை விளக்கம்

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு முனையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது சென்னை காவல் துறையில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளபடி ஜாபர் சாதிக் மீது எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியன்று நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகளா? சென்னை காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,CHENNAI ,CHENNAI POLICE ,Chennai Police Department ,Central Narcotics Control Station ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை