×

அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்…அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு.: ஓபிஎஸ்- இபிஎஸ் வாழ்த்து

சென்னை: அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.அந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். அதிமுக-வின் முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை தொடர்ந்து தற்காலிக அவைத்தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். அதிமுக-வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்வர் ராஜா நீக்கப்பட்ட மறுநாளே அதைத் தலைவர் பதவி நிரப்பப்பட்டுள்ளது. கன்னியகுமாரியைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன், அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியது முதலே கட்சியில் இருந்து வருகிறார். மேலும் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு செயற்குழுவில் ஓபிஎஸ்- இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். …

The post அதிமுக-வின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்…அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு.: ஓபிஎஸ்- இபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Usain ,OPS-EPS ,Chennai ,Coordinator ,O. Panneerselvam ,Edappadi Palaniswami ,Mahan Usen ,OPS ,Dinakaran ,
× RELATED ₹10ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர் கைது