×

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திய 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய ராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு 2024ம் ஆண்டிற்கான பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பிறப்பு பாலின விகிதம், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உள்ளிட்ட காரணிகளை பரிசீலித்து, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்ட நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளதை பாராட்டி ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் தங்கப் பதக்கமும், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வெள்ளிப் பதக்கமும், ஈரோடு கலெக்டர் ராஜ கோபால் சுன்கராவிடம் வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

The post பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திய 3 மாவட்ட நிர்வாகங்களுக்கு பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Ramanathapuram ,Kanchipuram ,Erode ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...