×

திருவில்லிபுத்தூரில் சீசன் இல்லாததால் பால்கோவா சேல்ஸ் ‘டல்’: கடைக்காரர்கள், தயாரிப்பாளர்கள் கவலை

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் சீசன் இல்லாததால், பால்கோவா விற்பனை குறைந்து வருவதால் கடைக்காரர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பிரியாணிக்கு சங்கரன்கோவில், முறுக்குக்கு மணப்பாறை, அல்வாவுக்கு நெல்லை, மல்லிக்கு மதுரை, சேவுக்கு சாத்தூர் என்றால், திருவில்லிபுத்தூருக்கு பால்கோவா விஷேசமாகும். மிகுந்த சுவையுடனும், தரத்துடனும் தயாரிக்கப்படுவதால் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து திருவில்லிபுத்தூருக்கு வரும் மக்கள் முதலில் வாங்கி ருசிப்பது பால்கோவாகும்.

ஆண்டாள் கோயில் தேரோட்டம், தீபாவளி பண்டிகை, சபரிமலை சீசன், குற்றால சீசன் மற்றும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை ஆகிய சீசன் நேரங்களில் பால்கோவா விற்பனை உச்சத்தில் இருக்கும். தற்போது திருவிழா சீசன் எதுவும் இல்லாததால் விற்பனை குறைந்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், தற்போது திருவிழா போன்ற சீசன் எதுவும் இல்லாததால் கடந்த சில நாட்களாக விற்பனை குறைந்துள்ளது. இதனால், ஒரு சில பால்கோவா தயாரிப்பு நிறுனங்கள் விடுமுறை அளித்துள்ளன’ என்றனர்.

The post திருவில்லிபுத்தூரில் சீசன் இல்லாததால் பால்கோவா சேல்ஸ் ‘டல்’: கடைக்காரர்கள், தயாரிப்பாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Tiruvilliputhur ,Thiruvilliputhur ,balkoa ,Nellie ,Madurai ,Thiruvilliputdur ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க...