×

தேங்காய் பால் அல்வா

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப்
தண்ணீர் – 2 கப்

வெல்லத்தை கரைப்பதற்கு…

வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 1/4 கப்

அல்வாவிற்கு..

நெய் – 1 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1 கப்

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரைத்த தேங்காயில் 2 கப் நீரை ஊற்றி, வடிகட்டி சற்று கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை மாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுக்க வேண்டும்.அதன் பின் அதில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வடிகட்டி ஊற்றி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.அடுத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி, கட்டிகளின்றி நன்கு கிளறி விட வேண்டும்.கட்டிகள் நீங்கி, நன்கு அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும். இப்படி கிளறும் போது ஸ்படுலாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் கிளறுவதற்கு இன்னும் ஈஸியாக இருக்கும்.குறைந்தது 10 நிமிடம் வரை நன்கு கிளறி விட வேண்டும்.எண்ணெய் நன்கு பிரிந்து வருவதைக் கண்டால், சரியான பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அதன் பின் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு சில்வர் கிண்ணத்தில் போட்டு பரப்பி விட வேண்டும்.அதன் பின் அதை 1/2 மணிநேரம் அப்படியே குளிர வைக்க வேண்டும்.இறுதியாக கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.

The post தேங்காய் பால் அல்வா appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு