×

Article 370ஐ ரத்து செய்ததை விமர்சிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் கருத்து


டெல்லி: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சிக்க உரிமை உண்டு என்றும் அரசின் நடவடிக்கைகள் மீதான ஒவ்வொரு விமர்சனமும் அல்லது எதிர்ப்பும் 153-ஏ பிரிவின் கீழ் குற்றமாக கருதப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் இன்றியமையாத அம்சமான ஜனநாயகம் நிலைக்காது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தினத்தை கருப்பு நாள் என வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்ததற்காக மகாராஷ்டிரா பேராசிரியர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

The post Article 370ஐ ரத்து செய்ததை விமர்சிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,India ,Jammu and ,Kashmir ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு