×

சிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை: சிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை. இங்கு ஆண்டு தோறும் ஏராளமான விழாக்கள் அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இதில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருத கூடியது மகா சிவராத்திரி.

இந்த சிவராத்திரியானது உருவான ஸ்தலம் திருவண்ணாமலை. குறிப்பாக மகா சிவராத்திரி தினமான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகாசிவராத்திரி தினமான இன்று மாலை 7 மணி முதல் நாளை விடியற்காலை 6 மணி வரை தொடர்ந்து 4 கால பூஜைகள் மூலவரான அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணாமலையாருக்கு பல்வேறு வண்ண மலர்களை கொண்டு சிறப்பு லட்சாத்திரையும் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டம், மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் திருக்கோவிலில் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர். லிங்கோத்பவருக்கு இன்று இரவு இரண்டாம் கால பூஜையில் தாழம் பூ வைத்து இன்று மகா சிவராத்திரி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருவதுடன் கிரிவலத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்: நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple ,Shivaratri ,Thiruvannamalai ,Shivarathri ,Sami ,Tiruvannamalai ,Panchabhuta ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...