×

பழநி கோயில் நிலத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்றுஇடம் வழங்கும்வரை அகற்றக்கூடாது: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அதை ஏற்று, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

The post பழநி கோயில் நிலத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்றுஇடம் வழங்கும்வரை அகற்றக்கூடாது: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Chennai ,Adimuka General Secretary ,Edapadi Palanisamy ,Palani Dandayudapani Swami Temple ,Chennai High Court Maduraikale and Usa ,Pali Temple ,Palani ,Temple ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...