×

முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல்

சென்னை: ராஜிவ்கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான முருகனுக்கு அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலுக்கு இலங்கை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நளினி சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெறும்படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு அனுமதி கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் நளினி தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Murugan ,Nalini ,Chennai ,Madras High Court ,Rajiv ,Sri Lankan embassy ,Union ,Dinakaran ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்