×

காங்., விசிக, மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் குழுவினருடன் ஆலோசனை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுகவுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post காங்., விசிக, மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் குழுவினருடன் ஆலோசனை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Congress ,VISA ,Madhyamik ,Anna Vidyalaya, Chennai ,Chennai ,DMK ,Ramanathapuram ,Indian Union Muslim League Party ,M.K.Stal ,Anna University ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...