×

தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை திருவடத்தனூர் பள்ளி மாணவர்கள்

தண்டராம்பட்டு, மார்ச் 8: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் திருவடத்தனூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த 2வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். அதில், இப்பள்ளியின் 7 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் தாசில்தார் நடராஜன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்று மற்றும் பரிசு கோப்பையை வழங்கினர். இதில், மாவட்ட தலைமை காதிர் அப்துல்காதர், பள்ளி தலைமை ஆசிரியர் அப்சர்பாஷா, சிலம்பாட்ட பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை திருவடத்தனூர் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvathanur school ,Thandarampatu ,Thiruvathanur ,Thiruvathanur Panchayat Union Muslim Middle School ,Thandaramptu ,Salem ,
× RELATED சுடுகாட்டிற்கு பாதை ஏற்படுத்தி தந்த...