×

விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட தனியார் கம்பெனி நிர்வாக இயக்குனர்


புதுடெல்லி: ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 5ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அப்போது, பிசினெஸ் வகுப்பில் பயணம் செய்ய வந்திருந்த ஒரு பெண் பயணி பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதை பார்த்த விமான கேப்டன் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்ட பெண்ணை கீழே இறக்கி விடுமாறு கூறினார்.

அவரது அறிவுரையின்படி அந்த பெண் பயணி விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டவர் பெயர் எதையும் ஏர் இந்தியா வெளியிடவில்லை. ஆனால், அவர் பெயர் ரஷ்மி சலுஜா,ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக உள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட தனியார் கம்பெனி நிர்வாக இயக்குனர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Air India ,Delhi Airport ,London ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு