×

ரூ.820 கோடி வங்கி மோசடி 67 இடங்களில் சிபிஐ ரெய்டு: 2 பேர் மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி: யூகோ வங்கியின் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனையில் நடந்த ரூ.820 கோடி ஊழல் தொடர்பாக 67 இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் கடந்த ஆண்டு நவம்பர் 10 முதல் 13ம் தேதி வரையான 4 நாட்களில் ஐஎம்பிஎஸ் (உடனடி கட்டண) முறையில் பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பிட்ட இந்த 4 நாட்களில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள யூகோ வங்கியின் 2,874 கிளைகளில் கணக்கு வைத்துள்ள 41,296 பேரின் வங்கி கணக்குகளில் 8,53,049 உடனடி கணக்கு பரிவர்த்தனை மூலம் ரூ.820 கோடி வரவு வைக்கப்பட்டது.

பணம் அனுப்பிய வங்கிகளில் இருந்து பணம் கழிக்கப்படாமல்(டெபிட்) செய்யப்படாமலேயே யூகோ வங்கி கணக்குகளில் ரூ.820 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யூகோ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.  இதுதொடர்பாக கடந்த டிசம்பர் 5ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, கர்நாடகாவின் மங்களூரூ ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.

நேற்று ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் புனே, ஜோத்பூர், ஜெய்பூர், ஜாலோர், நாவுகர், பார்மர், பலோடி உள்ளிட்ட 7 நகரங்களின் 67 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, 130 ஆவணங் களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மங்களூருவை சேர்ந்த எல்கோட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைப்பொறியாளர்கள் அவினேஷ் ஸ்ரீவத்சவா, சுப்ரியா மல்லிக் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post ரூ.820 கோடி வங்கி மோசடி 67 இடங்களில் சிபிஐ ரெய்டு: 2 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : CBI ,New Delhi ,UCO Bank ,Ugo Bank ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...