பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இந்தியன்வெல்ஸ் நகரில் நடக்கிறது. அதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியார்ஜி(32வயது, 106வது ரேங்க்), பிரிட்டன் வீராங்கனை கேத்தி பவுல்டர்(27வயது, 27வது ரேங்க்) ஆகியோர் நேற்று மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய கமிலா 6-3, 6-2 என நேர் செட்களில் கேத்தியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தாா். இந்த ஆட்டம் ஒரு மணி 18 நிமிடங்கள் நடந்தது. கேத்தி சில நாட்களுக்கு முன்பு முடிந்த சாண்டீயகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்.
The post சாம்பியனை வீழ்த்திய கமீலா appeared first on Dinakaran.