×

குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

புழல்: கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் பல்லவன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(46). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி செண்பகவல்லி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். வெங்கடேசன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் குடிபோதையில் வந்ததால் மீண்டும் கணவன் மனைவி இருவரிடையும் தகராறு ஏற்பட்டது. பின் தனது படுக்கை அறைக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, மறுநாள் காலையில் குடும்பத்தினர் பார்க்கும்போது வெங்கடேசன் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Venkatesan ,PD Murthy Nagar Pallavan Street, Padiyanallur ,Sengunram ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!