×

கவரப்பேட்டை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 7 இருசக்கர வாகனம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் போலீசாரால் அதிரடியாக கைது ெசய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவரப்பேட்டை, அமிதாநெல்லூர், பஞ்செட்டி, சத்தியவேடு சாலை, ஜி.ஆர். கண்டிகை, கெட்டனமல்லி, தண்டலச்சேரி மேல்முதலம்பேடு, ஆண்டர்குப்பம், கிழ்முதலம்பேடு, கொள்ளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒரு சில பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக கவரபேட்டை போலீசாருக்கு புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசாருடன் இணைந்து கவரப்பேட்டை போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது, நேற்றுமுன்தினம் இரவு தச்சூர்பகுதியில் பைக்கில் ஒருவர் வேகமாக வந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ய இருந்த நிலையில் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். உடனே, அவரை விரட்டிப் பிடித்த போலீசார் அவரிடம் இருந்த பைக்கை சோதனை செய்தனர். அப்போது, அது திருடப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

அப்போது, அவரிடம் நடத்திய விசாரணையில் ஆரணி பகுதியைச் சேர்ந்த கோழி கார்த்திக்(27) இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர் பைக் திருட்டில் இவருடன் ஈடுபட்டு வந்த ஆரணி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (எ) பாலாஜி(21) என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த பைக் திருட்டில் இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா திருடப்படும் வாகனங்கள் எங்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கவரப்பேட்டை அருகே வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது: 7 இருசக்கர வாகனம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kavarappettai ,Kummidipoondi ,Kavarappettai Police Station ,Boundary ,Amithanelloor ,Panchetti ,Sathyavedu Road ,G.R. Kandigai ,Ketanamalli ,Thandalachery Mellumalampedu ,Andarkuppam ,Dinakaran ,
× RELATED ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை