×

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: வரும் 26ம் தேதி நேர்காணல் தொடக்கம்

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் இன்று காலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2022ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.

முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி நடந்தது. மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 518 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 162 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை மெயின் தேர்வு நடந்தது. இத்தேர்வை 2,113 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 1333 பேர், பெண்கள் 780 பேர், அடங்குவர்.

இந்த நிலையில் குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.

The post துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: வரும் 26ம் தேதி நேர்காணல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TNPSC ,DSP ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்