×

தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி?: காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை : தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி? என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது,”வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டது மாநில அரசு, ஒரு ரூபாயைக்கூட இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி. ராமேஸ்வரம் கோயிலை உலகத்தரம் வாய்ந்த ஆலயமாக மாற்றுவேன் என 2014-ல் பிரதமர் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை ராமேஸ்வரம் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் பத்திரம் பற்றிய தகவலை வெளியிட அவகாசம் கோரிய எஸ்பிஐயை கண்டித்து சென்னையில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலகம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழ்நாடு மக்களை ஒருபோதும் பிரதமர் மோடி ஏமாற்ற முடியாது. விவசாயிகளின் நண்பன் என சொல்லும் பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டத்தை ஏன் கொண்டுவந்தார்?. மக்களவை தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. மதிமுக, விசிக உள்ளிட்ட மாநில கட்சிகளுடனேயே இன்னும் பேச்சுவார்த்தை முடியவில்லை. நாங்கள் தேசிய கட்சி.,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி?: காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Congress Committee ,President Selvaperundhai ,Chennai ,PM Modi ,President ,Selvaperundagai ,President Selvaperunthakai ,Dinakaran ,
× RELATED கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட...