×

கடும் துர்நாற்றும் வீசுவதாக கூறி மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை மக்கள் முற்றுகை

நாகப்பட்டினம், மார்ச்7: திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் மீன் எண்ணெய் தயார் செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கசார் என அழைக்கப்படும் மீன் கழிவுகளை ராட்சத இயந்திரங்கள் கொண்டு அரைத்து மீன் எண்ணெய் தயார் செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் மீன் கழிவுகளை இறால் தீவனங்களுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு மீன்கள் அரைக்கும் பொழுது பாய்லரில் இருந்து வெளியேறும் புகைகளால் துர்நாற்றம் வீசுவதால் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாவதாக உத்தமசோழபுரம், ஒக்கூர், வாழஒக்கூர், வெங்கிடாங்கால் உள்ளிட்ட கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இந்நிலையில் அந்த நிறுவனத்தை விரிவாக்கம் செய்து அருகில் மற்றொரு மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க பணிகள் தொடங்கப்பட இருந்தது. இதனால் ஆத்திரடைந்த அப்பகுதி மக்கள் அந்த தனியார் நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் அந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுவனத்தின் முகப்பு கண்ணாடிகளை உடைத்தனர்.

தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீன் எண்ணெய் உற்பத்தியை நிறுத்த வேண்டும், துர்நாற்றம் வீசும் நிறுவனத்தை மூட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post கடும் துர்நாற்றும் வீசுவதாக கூறி மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Uttamasholapuram ,Thirumarukal ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை