×

நெல்லையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை, மார்ச் 7: நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தொழில் குறிப்பாக பாதுகாவலர் தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எல்லைக்குட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சிறப்பாய்வு மேற்கொண்டனர். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 23 நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட போது குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் மற்றும் நிலுவை தொகை ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 402 வழங்க கோரி 5 கேட்பு மனுக்கள் நெல்லை இணை ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 24 தொழி லாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நெல்லையில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Assistant Labor Commissioner ,Murugaprasanna ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...