- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கு தேசம் - ஜன சேனா
- திருமலா
- தெலுங்கு தேசம் கட்சி
- ஜனசீனா கட்சி
- மங்களகிரி
- ஜனாதிபதி
- சந்திரபாபு
திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கூட்டணியான ஜனசேனா கட்சியுடன் இணைந்து பிற்படுத்தப்பட்டோருக்கான தேர்தல் வாக்குறுதிகளை நேற்று மங்களகிரியில், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு முன்னிலையில் வெளியிட்டது. இதில் தற்போது முதியோருக்கு வழங்கப்படும் ₹3 ஆயிரத்தை பென்சன் ₹4 ஆயிரமாக உயர்த்துவோம். பிற்படுத்தப்பட்டோருக்கு 50 வயது நிரம்பியதுமே ஓய்வூதிய பென்சன்.
பிற்படுத்தப்பட்டோரை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம், வரும் ஐந்து ஆண்டுகளில் நலவாரியத்திற்கு ₹1.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும். சமூக நீதி மறுஆய்வுக் குழுக்கள் உருவாக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் 34 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். சட்டப் பேரவையில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 34 சதவீத இடஒதுக்கீடு: தெலுங்குதேசம்-ஜனசேனா அறிவிப்பு appeared first on Dinakaran.