×

பழுதான லாரி மீது டிப்பர் லாரி மோதல்

பாகூர், மார்ச் 7: திண்டிவனம் பகுதியில் இருந்து ஜல்லிகள், ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை கடலூர் நோக்கி டிப்பர் லாரி புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சாலை சந்திப்பு அருகே சென்றபோது திடீரென பழுதாகி சாலையில் நின்று விட்டது. இதற்கிடையே, அவ்வழியாக சென்ற புறவழிச்சாலையில் கட்டுமான பணியில் ஈடுபடும் டிப்பர் லாரி, இருளான பகுதியில் நின்றிருந்த பழுதான லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், படுகாயமடைந்த டிரைவரை, புறவழிச்சாலை பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காயமடைந்த டிரைவர் யார், ஊர் பெயர் எதுவும் தெரியவில்லை. இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழுதான லாரி மீது டிப்பர் லாரி மோதல் appeared first on Dinakaran.

Tags : Bagur ,Tindivanam ,Cuddalore ,Adingapattu ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது