×

தடை விதிக்கப்பட்டதால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?.. ரிசர்வ் வங்கி விளக்கம்

புதுடெல்லி: பேமண்ட் வங்கி விதிகளை பின்பற்றாததால், பே-டிஎம் பேமண்ட் வங்கிக்கு தடை விதித்து, ஜனவரி 31ம் தேதி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பே-டிஎம் பாஸ்டேக் மற்றும், பேமண்ட் வங்கிச் சேவைகளை பிப்ரவரி 29ம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என்ற நிலை இருந்தது. பின்னர் இந்த சேவைகளை பெறுவதற்கான அவகாசத்தை மார்ச் 15ம் தேதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் நேற்று கூறியதாவது:
பேமண்ட் வங்கிக்கான கெடு மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது. பேடிஎம் பேமண்ட் ஆப்ஸ் தொடர்ந்து செயல்படலாமா கூடாதா என்பது குறித்து தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் முடிவெடுக்கும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ரிசர்வ் வங்கி குறுக்கிடாது. அதேநேரத்தில், ரிசர்வ் வங்கி தடையால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 80 முதல் 85 சதவீதம் பேர் பாதிக்கப்பட மாட்டார்கள். மற்றவர்கள் தாங்கள் வைத்துள்ள பே-டிஎம் யுபிஐ ஆப்சை பிற வங்கிகளுடன் இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தடை விதிக்கப்பட்டதால் பே-டிஎம் வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?.. ரிசர்வ் வங்கி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,New Delhi ,Pay-TM Paymont Bank ,Paymond Bank ,Pay ,Pastake ,Dinakaran ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...