×

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி.

விருதாச்சலம்: விருத்தாச்சலம்  ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் 2000 மேற்பட்டோர் இணைந்து  உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச மகளிர் தினத்தில் பெண்மையைப் படுத்த,  தாய்மையைப் புனிதப்படுத்த,  ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் 2000 மாணவ மாணவிகள்  இணைந்து,  தாயின் கருவறை வடிவமைப்பில் நின்று, பிரம்மனி 2024 என்ற  நோபல் உலக சாதனை முயற்சியில்  ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா கல்விக் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினர்களாக ஜெயப்பிரியா குழும நிறுவனங்களின் டிரஸ்டி  கஸ்தூரி ராசகோபாலன், ஜெயப்பிரியா குழும நிறுவனங்களின் இயக்குநர் அனிதா ஜெயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக குழுமங்களின் இயக்குநர்  தினேஷ்  முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) .சாந்தி, வடக்குத்து பப்ளிக் பள்ளியின் செயலாளர் சிந்து, விருத்தாச்சலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் .கீதா , வேப்பூர் காவல் ஆய்வாளர் சுதா மருத்துவர்கள் தமிழரசி, சமீம் நிஹார்,  சௌமியா பிரசன்னா, விவசாய பெண்மணி சந்திரா ஆகியோர் கலந்து  கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடினை ஜெயப்பிரியா கல்வி குழுமங்களின்  முதன்மை நிர்வாக அலுவலர்  ராமன்குமார மங்கலம், முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர். சூர்யா கண்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மாணவர்கள் தாயின் கருவறை வடிவமைப்பில் நின்று, பிரம்மனி 2024 நிகழ்வினை முடித்து, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

The post உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் நடத்திய நோபல் உலக சாதனை நிகழ்ச்சி. appeared first on Dinakaran.

Tags : Jayapriya Vidyalaya School ,International Women's Day ,Jayapriya Vidyalaya Educational Group ,
× RELATED உசிலம்பட்டி அருகே சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய போலீசார்