×

புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கேட்டு கடலில் இறங்கி போராட்டம்: போலீஸ் – போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு!

 

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் பலாத்கார முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. 4 நாட்களாக சிறுமியை தேடிவந்த நிலையில் நேற்று அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்கார முயற்சியில் இறந்தது தெரிய வந்தது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர், பலாத்கார முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழந்துள்ளது. சிறுமி உயிரிழந்த சனிக்கிழமை அன்றே போலீசுக்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர்.

சிறுமி உயிரிழப்பு தொடர்பாக 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். கருணாஸ், விவேகானந்தன் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கேட்டு இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்ய முயன்றதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து காந்தி சிலை பின்புறம் உள்ள கடலில் இறங்கி இளைஞர்கள், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி கேட்டு கடலில் இறங்கி போராட்டம்: போலீஸ் – போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ambedkar Nagar ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை