×
Saravana Stores

இந்திய வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாடுவது உள்நாட்டு போட்டியின் தரத்தை உயர்த்தும்: சச்சின் டெண்டுல்கர் கருத்து

மும்பை: இந்திய வீரர்கள் தங்கள் உள்நாட்டு அணிகளுக்கு திரும்பும்போது, அது இளைஞர்களின் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துகிறது என கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வருடாந்திர ஒப்பந்தம் பெற்ற இந்திய சீனியர் அணி வீரர்களுக்கான பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அதில் முன்னணி வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் பட்டியலில் இடம் பெறாதது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இந்நிலையில் இந்திய வீரர்கள் தங்கள் உள்நாட்டு அணிகளுக்கு திரும்பும்போது, அது இளைஞர்களின் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துகிறது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். “இந்திய வீரர்கள் தங்கள் உள்நாட்டு அணிகளுக்கு திரும்பும்போது, அது இளைஞர்களின் ஆட்டத்தின் தரத்தை உயர்த்துகிறது, மேலும் சில நேரங்களில் புதிய திறமைகள் அடையாளம் காணப்படுகின்றன.

இது தேசிய வீரர்களுக்கு சில சமயங்களில் அடிப்படைகளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. உள்நாட்டு போட்டிகளில் முன்னணி வீரர்கள் பங்கேற்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ரசிகர்களும் தங்கள் உள்நாட்டு அணிகளைப் பின்தொடர்ந்து ஆதரிக்கத் தொடங்குவார்கள்” என சச்சின் தெரிவித்துள்ளார்.

The post இந்திய வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாடுவது உள்நாட்டு போட்டியின் தரத்தை உயர்த்தும்: சச்சின் டெண்டுல்கர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy ,Sachin Tendulkar ,MUMBAI ,India ,Dinakaran ,
× RELATED இன்னிங்ஸ், 98 ரன் வித்தியாசத்தில்...