×
Saravana Stores

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்: கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழப்பு!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தரையில் 7அடி வரை உறைபனி தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. தீவிர வானிலை பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைத் தாக்கியது, சாலைகளை அடைத்து நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியது.

மேலும் மின்சாரம், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மகாண தேசிய பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருபத்தி இரண்டு குழந்தைகளும் அடங்குவர், அவர்களில் பலர் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் புதையுண்டதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்: கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,provincial disaster management commission ,northwestern Khyber, Karachi province ,Dinakaran ,
× RELATED ஊழல் வழக்கில் இம்ரான் மனைவிக்கு ஜாமீன்